தொட்டியில் தவறி விழுந்து சிறுவன் பலி

அம்பை, டிச. 26: கல்லிடைக்குறிச்சி தீச்சன் காலனியில் வசித்து வருபவர் மாரியப்பன், இவரது மனைவி வள்ளியம்மாள். இவர்களது 2வது மகன் உமேஷ்ராஜா (3), சம்பவத்தன்று மாலையில் வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்தான். சிறிது நேரத்தில் சிறுவனை காணவில்லை. பெற்றோர் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் மாரியப்பன் வீட்டின் அருகே பிச்சையா என்பவர் வீட்டில் தரைத்தள தொட்டி கட்டியுள்ளார். இதில் தேங்கி கிடந்த மழைநீரில் சிறுவன் தவறி விழுந்து கிடந்தான். உறவினர்கள் அவனை மீட்டு மருத்துவனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து கல்லிடைக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

>