கிறிஸ்துமஸ் பண்டிகையை யொட்டி தென்காசி தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை

தென்காசி, டிச.26: தென்காசியில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆர்.சி. மற்றும் சிஎஸ்ஐ உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களில் சிறப்பு ஆராதனை நடந்தது.  தென்காசி புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு நேற்று முன்தினம் நள்ளிரவில் சிறப்பு திருப்பலியை பங்குத்தந்தை ஜான்போஸ்கோ நிறைவேற்றி குழந்தை இயேசுவின் சொரூபத்தை குடிலில் கொண்டு வைத்தார். திருப்பலி நிறைவடைந்தவுடன் குடிலில் வைக்கப்பட்டிருந்த குழந்தை இயேசுவின் சொரூபத்தை ஏராளமானோர் தொட்டு வணங்கினர். முன்னதாக அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது.   மேலமெஞ்ஞானபுரம் தூய சந்தியாகப்பர் ஆலயத்தில் பங்குத்தந்தை சுரேஷ் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவிக்கப்பட்டு கேக் வழங்கப்பட்டது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

ஆய்க்குடி அகரக்கட்டு புனித அந்தோணியார் ஆலயத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழாவில் பங்குத்தந்தை எட்வின்ராஜ் திருப்பலி நிறைவேற்றினார். தொடர்ந்து குழந்தை இயேசுவின் சொரூபத்தை குடிலில் வைக்கப்பட்டதையடுத்து ஏராளமானோர் தொட்டு வணங்கினர். விழாவில்  நாட்டாமைகள் அந்தோணி வியாக ப்பன், அமிர்தசெல்வன், அருட்காட்வின், பொருளாளர் வளன் அரசு, இளைஞர் காங்கிரஸ் தலைவர் கார்வின், தனிஸ்லாஸ், ஆலய உபதேசியர்  மத்தேயு, சமத்துவ மக்கள் கழக மாவட்ட செயலாளர் அகரக்கட்டு  லூர்து நாடார், அருட்சகோதரிகள் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.   இதேபோல் தென்காசி சி.எஸ்ஐ. கிறிஸ்து ஆலயத்தில் நேற்று அதிகாலையில் கிறிஸ்துமஸ் சிறப்பு ஆராதனை நடந்தது. ஆராதனை முடிந்தவுடன் கிறிஸ்துமஸ் தாத்தா கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினார். ஏ.ஜி சபை, வடக்கு சீயோன் ஆலயம், மாரநாதா ஆலயம், ரயில்வே பீடர் ரோடு பெந்தேகொஸ்தே,ரயில் நகர் சால்வேஷன் ஆர்மி சர்ச் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு ஆராதனைகள் நடந்தது. ஏற்பாடுகளை அந்தந்த பகுதிகளில் உள்ள ஆலய நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories:

>