33ம் ஆண்டு நினைவு தினம்: எம்ஜிஆர் சிலைக்கு அதிமுகவினர் மரியாதை

கயத்தாறு, டிச. 26: முன்னாள் முதல்வர் எம்ஜிஆரின் 33வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. இதையொட்டி கடம்பூர் சிதம்பராபுரத்தில் உள்ள அமைச்சரின் இல்லத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்ஜிஆரின் படத்திற்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். பின்னர் கயத்தாறு பழைய பால்பண்ணை, மேல பஜாரில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்று அஞ்சலி செலுத்தினார்.  நிகழ்ச்சியில் கயத்தாறு மேற்கு ஒன்றிய செயலாளர் வினோபாஜி, மாவட்ட ஜெ.பேரவை செயலாளர் செல்வகுமார், இணை செயலாளர் நீலகண்டன், வடக்கு மாவட்ட விவசாயப் பிரிவு மாவட்ட இணைச்செயலாளர் மாரியப்பன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், நகர செயலாளர் கப்பல் ராமசாமி, மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ், மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் குடியரசு பாண்டியன், இணை செயலாளர் ஆறுமுகப்பாண்டியன், மாணவரணி ஒன்றிய செயலாளர் நவநீதகிருஷ்ணன், மாவட்ட துணை செயலாளர் கண்ணன், இலக்கிய அணி மாவட்ட இணை செயலாளர் பாலகணேசன், தகவல் தொழில்நுட்ப பிரிவு பிரபாகரன், 8வது வார்டு வேல்முருகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

விளாத்திகுளம் : விளாத்திகுளம் பஸ் நிலையம் முன்பு எம்.ஜி.ஆரின் சிலைக்கு சின்னப்பன் எம்.எல்.ஏ. தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதனையடுத்து அமைதியாக ஊர்வலம் சென்று காய்கறி மார்க்கெட் அருகேயுள்ள சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.இதில் ஜெ.பேரவை இணைச் செயலாளர் குட்லக் செல்வராஜ், முன்னாள் எம்எல்ஏ என்.கே.பெருமாள், யூனியன் சேர்மன் முனியசக்தி ராமச்சந்திரன், புதூர் யூனியன் சேர்மன் சுசிலா தனஞ்ஜெயன், ஒன்றிய செயலாளர்கள் நடராஜன், பால்ராஜ், ஞானகுருசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.  தூத்துக்குடி: தூத்துக்குடி பழைய மாநகராட்சி அலுவலக வளாகத்திலுள்ள எம்ஜிஆர் சிலைக்கு அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சருமான சி.த.செல்லப்பாண்டியன் தலைமையில் மாவட்ட ஆவின் சேர்மன் சின்னத்துரை முன்னிலையில் அதிமுகவினர் மாலை அணிவித்தனர்.

இதில் மாவட்ட பொருளாளர் அமலிராஜன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் ராஜகோபால், மாநில பேச்சாளர்கள் கருணாநிதி, முருகானந்தம், பகுதி செயலாளர்கள் சேவியர், முருகன்,  மற்றும் மாரியப்பன், ஆறுமுகநயினார், வக்கீல்கள் ஆண்ட்ரூமணி, பிள்ளைவிநாயகம், ராஜாராம், போக்குவரத்து தொழிற்சங்கம் சுபான், சங்கர்,டெரன்ஸ் பங்கேற்றனர்.  ஏரல்:   ஏரலில் நகர அதிமுக சார்பில் எம்ஜிஆர் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதுபோல் பெருங்குளம், பண்டாரவிளையில் நடந்த நிகழ்ச்சியில் தெற்கு மாவட்ட செயலாளர் சண்முகநாதன் எம்எல்ஏ,  எம்ஜிஆர் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட அவைத்தலைவர் திருப்பாற்கடல், வைகுண்டம் ஒன்றிய செயலாளர்கள் கிழக்கு அழகேசன், மேற்கு காசிராஜன், நகர செயலாளர்கள்  ஆத்திப்பழம், வேதமாணிக்கம், மாவட்ட ஜெ.பேரவை துணைத்தலைவர் ரத்தினசபாபதி, ஒன்றிய ஜெ.பேரவை செயலாளர்கள் அசோக்குமார், பாஸ்கர், வர்த்தக அணி துணை செயலாளர் சிவக்குமார், விவசாய பிரிவு துணைத்தலைவர் பால்துரை, சிறுபான்மை பிரிவு இணை செயலாளர் எப்றாயீம், மாவட்ட பிரதிநிதி ராஜா, உமரிக்காடு பஞ்.தலைவர் ராஜேஷ் மற்றும் நிர்வாகிகள் காளிமுத்து, பாலமகராஜன் பங்கேற்றனர்.

Related Stories: