×

கோரணம்பட்டி ஊராட்சியில் எம்ஜிஆர் நினைவு நாள் அனுசரிப்பு

இடைப்பாடி, டிச.26: கோரணம்பட்டி ஊராட்சியில், மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. கோரணம்பட்டி ஊராட்சி அதிமுக சார்பில் கோரணம்பட்டி மன்ற அலுவலகம் முன்பு அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆர் படத்திற்கு மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் ராஜேந்திரன், கோரணம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜ்குமார் ஆகியோர் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் ஆனந்தகுமார், வெள்ளாலபுரம் ஊராட்சி தலைவர் கிருஷ்ணவேணி கணேசன், ஒன்றிய மகளிர் அணி தலைவி தங்கம் ஆறுமுகம், ஊராட்சி துணைத் தலைவர்கள் வளர்மதி கண்ணன், கோபால், வார்டு உறுப்பினர்கள் செல்விமணி ஜெகதீஸ்வரி, ரத்தினம், பழனிச்சாமி, மாணிக்கவாசகம் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Tags : MGR Memorial Day ,
× RELATED எம்ஜிஆர் நினைவு தினம்