×

சென்னையில் விசிக விருதுகள் வழங்கும் விழா செயலாளர் அழைப்பு

சேலம், டிச.26: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சேலம் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் வெளியிட்டுள்ள அறிக்கை: சான்றோர் பெருமக்களுக்கு விடுதலை சிறுத்தைகள் விருதுகள் வழங்கும் விழா, சென்னையில் இன்று (26ம் தேதி) மாலை 3 மணிக்கு சர் பிட்டி தியாகராயர் அரங்கத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி தலைமையில் நடைபெற உள்ளது.  விழாவில் அம்பேத்கர் சுடர் விருது கஞ்சா அயிலையாவுக்கும், பெரியார் ஒலி விருது பேரா.அருணனுக்கும், காமராசர் கதிர் விருது தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரிக்கும், அயோத்திதாசர் ஆதவன் விருது வை.பாலசுந்தரத்திற்கும், காயிதே மில்லத் பிறை விருது உமர்பாருக்கும், செம்மொழி ஞாயிறு விருது ரெ.பாலகிருஷ்ணனுக்கும் வழங்கப்பட உள்ளது. விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும், பொதுமக்களும் வருகை தந்து விருதுகள் பெறுபவர்களை வாழ்த்த வேண்டுகிறோம். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : Chennai ,Vizika Awards Ceremony ,
× RELATED சென்னையில் மதுபான விடுதி மேற்கூரை...