வாஜ்பாய் பிறந்தநாள் விழா 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

குமாரபாளையம், டிச.26:  மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பிறந்தநாள் விழா, குமாரபாளையம் நகர பாஜக  அலுவலகத்தில் நேற்று கொண்டாடப்பட்டது. வாஜ்பாய் உருவப்படத்திற்கு  கட்சியினர் மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர் பாண்டுரங்கன் கோயில்  மற்றும் லட்சுமி நாராயணா கோயிலில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்  வழங்கப்பட்டது. குமாரபாளையம் சட்டமன்ற தொகுதி பாஜக பொறுப்பாளர் ஓம்சரவணா  தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகர தலைவர் ராஜூ, முன்னாள் நகர செயலாளர்  கிஷோர், நகர துணைத் தலைவர் கிருஷ்ணன், நிர்வாகிகள் கண்ணன் குமார், சேகர்,  செந்தில், சத்தியானந்த் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>