×

குமாரபாளையத்தில் துண்டுபிரசுரம் விநியோகம் திமுகவினர் கையெழுத்து இயக்கம்

குமாரபாளையம், டிச.26: குமாரபாளையம்  நகராட்சி பகுதியில் உள்ள கடைகள், வியாபார நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும்  பேருந்து மற்றும் வாகனங்களில் சென்றவர்களிடம், அதிமுக ஆட்சியின் குறைகளை  சுட்டிக்காட்டி, குற்றப்பத்திரிகை என்ற பெயரில் அச்சிடப்பட்ட துண்டறிக்கைகளை  திமுகவினர் விநியோகித்து, நேற்று கையெழுத்தியக்கம் நடத்தினர்.  இந்நிகழ்ச்சியில் நகர பொறுப்பாளர் செல்வம், பொறுப்புகுழு உறுப்பினர்கள்  பரமசிவம், விஸ்வநாதன், அன்பரசு, ரவி, இளைஞரணி துணை அமைப்பாளர்  கதிரவன் சேகர், மாவட்ட மாணவரணி துணை அமைப்பாளர் மீனாட்சி சுந்தரம், வட்ட நிர்வாகிகள் முருகன், ரங்கநாதன், செல்வகணேஷ், சண்முகம், நகர இளைஞரணி  அமைப்பாளர் சரவணன், துணை அமைப்பாளர்கள் வெங்கடேசன், புவனேஷ்வரன், மாணவரணி  துணை அமைப்பாளர் சூர்யா, சந்திரன், இளைஞரணி கண்ணன்குட்டி, விக்னேஷ், தனுஷ்,  சீனிவாசன், நந்தகுமார், நிவாஷ், கிருத்திக்ராஜ், தினேஷ், பிரசாந்த்  உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Kumarapalayam DMK ,
× RELATED வையப்பமலையில் பக்தர்கள் கிரிவலம்