கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம் தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

திண்டுக்கல், டிச. 26: உலகம் முழுவதும் நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி திண்டுக்கல் மணிக்கூண்டு புனித வளனார் பேராலயத்தில் இயேசுவின் பிறப்பு பெருவிழா சிறப்பு கூட்டு திருப்பலி மறை மாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நடைபெற்றது. ஆயரின் செயலர் ஆபேல், பங்குத்தந்தையர்கள் சகாயராஜ், ஜெயசீலன் பிரபு, ஜெபராஜ் ஆகியோர் சிறப்பு கூட்டு திருப்பலியை நடத்தினர். தொடர்ந்து இறைவார்த்தை வழிபாடு, ஆயரின் மறையுரை, மன்றாட்டு, நற்கருணை வழிபாடு, இயேசு பாலன் ஆசி வழங்குதல் நடந்து திருப்பலி நிறைவு பெற்றது. அதன்பின் ஒருவருக்கொருவர் கேக், இனிப்பு வழங்கி கிறிஸ்து பிறப்பை கொண்டாடினார்கள். கொடைக்கானல் மூஞ்சிக்ல் திருஇருதய ஆண்டவர் ஆலயத்தில் எட்வின் சகாயராஜ் தலைமையிலும், உகார்தே நகர் ஆரோக்கிய அன்னை ஆலயத்தில் பீட்டர் சகாயராஜ், பாக்கியபுரம் ஆலயத்தில் அருள்ராயன், நூர்துபுரத்தில் அந்தோணி துரைராஜ் தலைமையிலும் சிறப்பு திருப்பலி பூஜைகள் நடந்தது. இதேபோல் திண்டுக்கல் மேட்டுப்பட்டி, முத்தழகுபட்டி, கொடைக்கானல் சலேத் அன்னை உள்பட மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடந்தது.

இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்

Related Stories:

More
>