இறந்த சாலை பணியாளர் வாரிசுகளுக்கு வேலை திண்டுக்கல் கோட்ட மாநாட்டில் வலியுறுத்தல்

திண்டுக்கல், டிச. 26: திண்டுக்கல்லில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கம் 7வது கோட்ட மாநாடு நேற்று நடந்தது. கோட்ட தலைவர் ராஜா தலைமை வகிக்க, ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு மாவட்ட தலைவர் ஜெயசீலன் மாநாட்டு பேரணியை துவங்கி வைத்தார்.  கூட்டத்தில் மாநில செயலாளர் ராஜமாணிக்கம், மாநில தலைவர் பாலசுப்பிரமணியன், மாநில பொருளாளர் தமிழ், மாநில பொது செயலாளர் அம்சராஜ் உள்பட பலர் கலந்து கொண்டு பேசினர். தொடர்ந்து கூட்டத்தில் பணியாளர்களின் 41 மாத பணிநீக்க காலத்தை பணிக்காலமாக அறிவிக்க வேண்டும். பணியின் போது இறந்து போன சாலை பணியாளர்களின் குடும்ப வாரிசுகளுக்கு நிபந்தனைகளை தளர்த்தி கருணை அடிப்படையில் வேலை வழங்க வேண்டும்.  பணியாளருக்கு ஆபத்து படி 10 சதவீதம் வழங்கிட வேண்டும், என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது

Related Stories:

>