×

சபரிமலை ஐயப்பனுக்கு அணிவிக்கும் தங்கஅங்கி பெட்டியை சுமந்த பட்டிவீரன்பட்டி பக்தர்

பட்டிவீரன்பட்டி, டிச. 26: பட்டிவீரன்பட்டியை சேர்ந்தவர் ராமையா (56).  ஐயப்ப பக்தரான இவர் கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக கேரள மாநிலம், சபரிமலையில் நடை திறந்திருக்கும் நாட்களில் அங்கேயே தங்கி அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு சார்பில் ஐய்யப்பனை காண வரும் பக்தர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து வருகிறார். குறிப்பாக இவர் எமர்ஜென்சி பிரிவு எனப்படும் பிரிவில் அங்கு வருகை தரும் பக்தர்களுக்கு திடீரென உடல் நலம் சரியில்லாமல் போனலோ, இறக்க நேரிட்டாலோ அவர்களுக்கு உதவுவது இப்பிரிவின் பணியாகும். இவரது இப்பணிக்காக மண்டல பூஜையின் போது ஐயப்ப சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்கஅங்கியை சுமந்து வரும் வாய்ப்பினை அகில பாரத ஐயப்பா சேவா அமைப்பு வழங்கியுள்ளது.  இதுகுறித்து ராமையா கூறியதாவது, ‘நான் சபரிமலையில் தொடர்ந்து செய்து வரும் சேவைக்காக அகில பாரத ஐயப்ப சேவா சங்க தமிழ் மாநில அமைப்பு ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க அங்கியை சுமக்கும் அரிய பாக்கியத்தை எனக்கு வழங்கியுள்ளது. இதை என் வாழ்நாள் பாக்கியமாக எண்ணுகிறேன். என் ஆயுள் முழுவதும் சபரிமலையில் சேவை செய்து வருவேன்’ என்றார்.

Tags : Sumantha Pattiviranapatti ,devotee ,Sabarimala Iyappan ,
× RELATED பக்தர்களை காக்கும் பக்த அனுமன்