சாயல்குடியில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

சாயல்குடி, டிச.26: சாயல்குடி, முதுகுளத்தூர் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி சாயல்குடி வேளாங்கன்னி மாதா தேவாலயம், கடலாடி புனித அந்தோணியார் தேவாலயம், மூக்கையூர் யாகப்பர் தேவாலயம், சவேரியார் பட்டிணம் சர்ச், மடத்தாகுளம் சி.எஸ்.ஐ சர்ச், முதுகுளத்தூர் டி.எல்.சி சர்ச் ஆகிய தேவாலயங்களில் அதிகாலையில் சிறப்பு திருப்பலி நடந்தது. பொதுமக்கள் புத்தாடை அணிந்து சிறப்பு பிரார்த்தனைகளில் கலந்து கொண்டனர். திருப்பலி நிகழ்ச்சிகளில் பங்குத்தந்தைகள் லூர்துராஜ்(மூக்கையூர்), பால்தினகரன்(மடத்தாகுளம்) சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Related Stories:

>