கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

சிவகங்கை, டிச.26: சிவகங்கை மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் நேற்று முன் தினம் நள்ளிரவு முதல் நேற்று காலை வரை கிறிஸ்துமஸ் பிரார்த்தனை திருப்பலிகள் நடந்தன. சிவகங்கையில் தூய அலங்கார அன்னை பேராலயத்தில் பங்குத்தந்தை சேசுராஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். காளையார்கோவில் புனித அருளானந்தர் ஆலயத்தில் பங்குத்தந்தை சூசைஆரோக்கியசாமி தலைமையில் பிரார்த்தனை திருப்பலி நடந்தது. பள்ளித்தம்பம் புனித மூவரசர்கள் ஆலயத்தில் பங்குத்தந்தை ஜார்ஜ் தலைமையில் நடந்த திருப்பலியில் ஏராளமான கிராமத்தினர் கலந்துகொண்டனர். மானாமதுரை அருகே புகழ்பெற்ற இடைக்காட்டூர் திரு இருதய ஆண்டவர் ஆலயத்தில் உலக நன்மை வேண்டி திருப்பலி நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். நாட்டரசன்கோட்டை அன்னை வேளாங்கண்ணி தூய ஆரோக்கிய மாதா ஆலயம், தேவகோட்டை உலக மீட்பர் ஆலயம், சகாய மாதா ஆலயம், சருகணி திரு இருதய ஆண்டவர் ஆலயம், புலியடிதம்பம் அடைக்கல அன்னை ஆலயம் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட தேவாலயங்களில் நடந்த திருப்பலி நிகழ்ச்சியில் பல்லாயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

காரைக்குடி செக்காலை தூய சகாயமாதா ஆலயத்தில் பங்குத்தந்தை எட்வின்ராயன் தலைமையில் உதவி பங்குத்தந்தை ஜாலிமரிவளன், முன்னாள் உதவி பங்குத்தந்தை ஒனாசியஸ் பிரபாகரன் திருப்பலி நிறைவேற்றினர்.  செஞ்சை குழந்தை தெரசாள் ஆலயத்தில் பங்குத்தந்தை சகாயராஜ் தலைமையில் திருப்பலி நடந்தது. அரியக்குடி வளன்நகர் குழந்தை இயேசு ஆலயத்தில் பங்குத்தந்தை அருள்ஜோதி, ஆவுடைய பொய்கை தூய அந்தோணியார் ஆலயத்தில் பங்குத்தந்தை ராஜமாணிக்கம், மானகிரி தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை ஜெரால்டுஜோசப் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

Related Stories:

>