கிறிஸ்துமஸ் விழா தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி

விருதுநகர், டிச.26:  விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தேவாலயங்களும் மின் விளக்குகளாலும் வண்ண நட்சத்திரங்களாலும் அலங்கரிக்கப்பட்டு, இயேசு பாலகன் பிறப்பு நிகழ்வுகளை சித்திரிக்கும் வகையில் ஆலயங்களில் குடில்கள் அமைக்கப்பட்டிருந்தன. கொரோனா தொற்று காரணமாக நள்ளிரவு திருப்பலிக்கு பதிலாக நேற்று முன்தினம்  இரவு 8 மணி முதல் 10 மணி வரை கிறிஸ்துமஸ் திருப்பலி நடைபெற்றது. விருதுநகர் தூய  இன்னாசியார் ஆலயத்தில் கிறிஸ்துமஸ் விழா  திருப்பலி ஆலய பங்குத்தந்தை பெனடிக்ட் அம்புரோஸ்ராஜ், துணைப்பங்குத்தந்தை சந்தியாகப்பன் தலைமையிலும், பாண்டியன்நகர் தூய சவேரியார் ஆலயத்தில் நொபிலி மறைப்பணி இயக்குநர் பெனடிக் பர்ணபாஸ், பங்குத்தந்தை ஸ்டீபன் சேவியர், எஸ்எப்எஸ் பள்ளி முதல்வர் இன்னாசிமுத்து தலைமையில் நடைபெற்றது. மாவட்டத்தில் அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

Related Stories:

>