×

புத்தாண்டையொட்டி நட்சத்திர ஓட்டல்கள், விடுதிகளில் அறைகள் முன்பதிவு முடிந்தன

ஊட்டி, டிச.26: கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள பெரும்பாலான நட்சத்திர ஓட்டல்களில் அறைகள் அனைத்தும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம் சர்வதேச சுற்றுலா நகரமாகும். இங்கு நிலவும் இதமான குளு குளு காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கம். ஆண்டுதோறும் கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் புத்தாண்டு சமயங்களில் விடுமுறையை கொண்டாட சுற்றுலா பயணிகள் ஊட்டிக்கு வருவார்கள். அதற்கேற்ப ஊட்டியில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கும். புத்தாண்டை வரவேற்கும் வகையில் ஓட்டல்கள் மின்ெனாலி அலங்காரம் செய்யப்பட்டு இரவு நேர பார்ட்டிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும்.  தற்போது, கொரோனா காரணமாக ஊரடங்கு தளர்வுக்கு பின் கடந்த 7ம் தேதி முதல் அனைத்து சுற்றுலா தளங்களும் திறக்கப்பட்டன. இதன்காரணமாக, நீலகிரிக்கு வர கூடிய சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இதனிடையே புத்தாண்டிற்கு இன்னும் ஒரு வாரம் உள்ள நிலையில், ஊட்டியில் உள்ள புத்தாண்டு கொண்டாட்டத்திற்காக ஊட்டியில் உள்ள நட்சத்திர விடுதிகள், ஓட்டல்கள், காட்டேஜ்களில் அறைகள் அனைத்தும் ஜனவரி 2ம் தேதி வரை ஆன்லைனில் நிரம்பி உள்ளன. 8 மாதங்களுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளதால், சுற்றுலா ெதாழிலை நம்பியுள்ள பலரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இருப்பினும், கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் ஓட்டல்கள், விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்ச்சிகளுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது.  இதை மீறி நள்ளிரவில் புத்தாண்டு கொண்டாட்டங்களில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் எச்சரித்துள்ளது. இதனால், இம்முறை ஊட்டியில் உள்ள ஓட்டல்களில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கான ஏற்பாடுகள் பெரிய அளவில் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Tags : star hotels ,inns ,New Year ,
× RELATED குரோதத்தை விடுத்து அன்பை விதைத்திடும் குரோதி புத்தாண்டு!