கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை

ஊட்டி,டிச.26: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஊட்டியில் உள்ள தேவாலயங்களில் நேற்று சிறப்பு பிரார்த்தனை நடந்தது.  கிறிஸ்துமஸ் பண்டிகையையொட்டி ஊட்டி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் நேற்று முன்தினம் மாலை 5.30 மணிக்கு கிறிஸ்துமஸ் பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நிகழ்ச்சி நடந்தது. நீலகிரி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜ் தலைமை தாங்கினார். தொடர்ந்து நேற்று ஆலய பங்குத்தந்தை ஜான் ஜோசப் தனிஸ் கிறிஸ்துமஸ் தின நற்செய்திகளை வழங்கினார். இதில் ஏராளமான கிறிஸ்துவ மக்கள் கலந்து கொண்டனர்.  இதேபோல் ஊட்டி மேரிஸ் ஹில் பகுதியில் உள்ள புனித மரியன்னை ஆலயம், சிஎஸ்ஐ., ஸ்டீபன் சர்ச், போஸ்ட் புனித தேரசோ அன்னை ஆலயம், எல்க்ஹில் புனித ஜூட்ஸ் ஆலயம், காந்தல் குருசடி ஆலயம், நொண்டிமேடு மற்றும் எச்.பி.எப்., ரோஸ் மவுண்ட் தேவாலயம், ஊட்டி சி.எஸ்.ஐ., வெஸ்லி ஆலயத்தில் ஆகியவற்றில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் கிறிஸ்துவ மக்கள் புத்தாடை அணிந்து பங்கேற்றனர். ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். மேலும் இதே போல் மாவட்டத்தின் பல பகுதிகளில் உள்ள தேவாலயங்களில் கிருஸ்துமஸ் தின சிறப்பு பிரார்த்தனைகள் நடந்தது.

Related Stories:

>