பெண்ணிடம் 4 பவுன் நகை பறிப்பு

கோவை, டிச.26: கோவை கணபதி விஜி ராவ் நகரை சேர்ந்தவர் தீபா(40). இவர் சம்பவத்தன்று கடைக்கு சென்று விட்டு வீட்டருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த 2 பேர் அவரது கழுத்தில் கிடந்த 4 பவுன் தங்க சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்றனர். அதிர்ச்சியடைந்த தீபா இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து நகை பறித்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

>