×

விவசாயிகள் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதா?

ஈரோடு, டிச.26: அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு செயற்குழு உறுப்பினர் பொன்னையன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பா.ஜ. அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் விரோத சட்டங்களால் இந்திய நாட்டின் வேளாண்மை கார்பரேட் நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு போய் விடும் ஆபத்து உள்ளது. இந்த பேராபத்தை இந்திய விவசாயிகள் அனைவரும் உணர்ந்துள்ளனர்.  பஞ்சாப், அரியானா, உ.பி, ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்கள் மட்டுமின்றி நாடு முழுவதும் நேரடி கொள்முதல் இல்லையெனில் உணவு தானியங்களை விவசாயிகள் விற்பனை செய்ய இயலாது. இந்த நிலையை உணர்ந்து தான், ஒரு மாத காலமாக வரலாறு காணாத வகையில் பல லட்சக்கணக்கான விவசாயிகள் டெல்லியை முற்றுகையிட்டு போராடி வருகின்றனர். இந்த போராட்டத்தில் இந்தியா முழுவதும் உள்ள விவசாயிகள் பங்கேற்று வருகின்றனர். போராட்ட களத்தில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்துள்ளனர். தமிழகத்திலும் விவசாயிகள் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தி வருகிறோம். உயிரை கொடுத்து போராடும் விவசாயிகளை கூலிக்கு போராடுகின்றார்கள் என தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞர் பிரிவு தலைவர் யுவராஜா இழிவுபடுத்தி உள்ளார். விவசாயிகளை கொச்சைப்படுத்திய யுவராஜாவை அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்பு குழு வன்மையாக கண்டிக்கிறது.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : peasantry ,
× RELATED விவசாயிகளின் போராட்டம் என்பது...