×

பாலவாக்கத்தில் தொகுப்பு வீடுகள் கட்டுவதில் முறைகேடு: திமுக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் சரமாரி புகார்

ஊத்துக்கோட்டை: பாலவாக்கம் கிராமத்தில் நடந்த திமுக கிராம சபை கூட்டத்தில், தொகுப்பு வீடுகள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளதாக பொதுமக்கள் சரமாரி புகார் கூறினர்.ஊத்துக்கோட்டை  அருகே பாலவாக்கம் கிராமத்தில் எல்லாபுரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில், ‘அதிமுகவை நிராகரிப்போம்’ என்ற தலைப்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் ஒன்றிய செயலாளர் பி.ஜெ.மூர்த்தி தலைமை தாங்கினார்.  பொதுக்குழு உறுப்பினர் ராமமூர்த்தி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் உதயசூரியன், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கே.வி.லோகேஷ், ஒன்றிய அவைத்தலைவர் ரவிச்சந்திரன், மாவட்ட பிரதிநிதி ரவிக்குமார், வக்கில் சினிவாசன், ஒன்றிய கவுன்சிலர்கள் சுரேஷ், குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் சிறப்பு அழைப்பாளராக  திமுக தலைமை பேச்சாளர் சேலம் சுஜாதா கலந்துகொண்டு  பேசினார். கூட்டத்தில், எல்லாபுரம் ஒன்றியத்தில் அரசு தொகுப்பு வீடுகள் கட்டுவதில் முறைகேடு நடந்துள்ளது. அதை முறையாக விசாரிக்க வேண்டும்.கும்மிடிப்பூண்டி தொகுதியில் மக்களை கண்டுகொள்ளாத எம்எல்ஏவை வரும் தேர்தலில் மக்கள் நிராகரிக்க வேண்டும். மணல் கொள்ளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : package houses ,Palavakkam ,meeting ,Grama Niladhari ,DMK ,
× RELATED வாகனங்கள் எதுவும் செல்லக் கூடாதாம்...