செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் முன்னறிவிப்பு இல்லாமல் மின்சார ரயில்கள் நிறுத்தம்: அதிகாரிகளுடன் பயணிகள் கடும் வாக்குவாதம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் முன்னறிவிப்பு இல்லாமல், ரயில்கள் நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் அவதியடைந்தனர். இதையொட்டி ரயில்வே அதிகாரிகளுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.செங்கல்பட்டு ரயில் நிலையத்தில் இருந்து சென்னை கடற்கரைக்கு வார வேலை நாட்களில் 26 புறநகர் மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் செங்கல்பட்டு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் சென்னைக்கு வேலைக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் நேற்று காலை வழக்கம்போல பணிக்கு செல்வதற்காக பயணிகள், செங்கல்பட்டு ரயில் நிலையம் வந்தனர். அப்போது கிறிஸ்துமஸ் அரசு விடுமுறையை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமை போல காலை 9.30 மணிக்கு மேல் மின்சார ரயில்கள் இயக்கப்படும் என அங்கிருந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதனால் காலையில் வேலைக்கு செல்ல வந்த பயணிகள்  ஆத்திரமடைந்து, அங்கிருந்த ரயில்வே போலீசார் மற்றும் அதிகாரிகளிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். முன்னறிவிப்பு இல்லாமல் ரயில்களை நிறுத்தியதால், எங்களுக்குதான் நஷ்டம். அதை நேற்றே அறிவித்து இருக்க வேண்டும். அதை ஏன் செய்யவில்லை என கோஷமிட்டனர். அதற்கு அதிகாரிகள், எவ்வித பதிலும் அளிக்கவில்லை. இதையடுத்து சிலர் வீடு திரும்பினர். சிலர் காத்திருந்து 9.30 மணி ரயிலில் தாமதமாக வேலைக்கு சென்றனர்.

Related Stories:

>