மாமல்லபுரத்தில் மக்கள் கூட்டம்

மாமல்லபுரம்: கிருஸ்துமஸ் பண்டிகை நேற்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து மாமல்லபுரத்துக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்தனர்.சுமார் 8 மாதங்களுக்கு பிறகு, நேற்று மாலை, புராதன சின்னங்களான வெண்ணெய் உருண்டை பாறை, அர்ச்சுணன் தபசு, ஐந்து ரதம், கடற்கரை கோயில் மற்றும் கடற்கரை பகுதியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.

புராதன சின்னங்கள் முன்பு சுற்றுலா பயணிகள் பலர் குடும்பத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர். மேலும், ஒரு சிலர் கடற்கரையில் உற்சாகமாக நடந்து சென்று பொழுதை கழித்தனர். கடலில் குளிக்க தடை இருந்தபோதும், தடையை மீறி சிலர் கடலில் இறங்கி ஆபத்தை உணராமல் குளித்தனர். இதனால், எங்கு பார்த்தாலும் மனித தலைகளாகவே காட்சி அளித்தது.

Related Stories:

>