×

தனியார் முதலை பண்ணையில் வெளிநாட்டு ஆமை திருட்டு

மாமல்லபுரம்: மாமல்லபுரம் அருகே தனியார் முதலை பண்ணையில் ரூ.15 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு ஆமை திருடுபோனது. மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலை, வடநெம்மேலியில் தனியார் முதலைப்பண்ணை உள்ளது. இங்கு பல்வேறு நாடுகளை சேர்ந்த அரியவகை முதலைகள், ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. இந்த பண்ணையில் கம்பி வேலிக்குள் அல்டாப்ரா என்ற 4 வெளிநாட்டு ஆமைகள் வளர்க்கப்படுகின்றன. இவை, இந்தோனேசியா தீவில் வாழ்பவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஆமைகள் 1.5 மீட்டர் நீளமும், 225 கிலோ எடை வரை வளரும் தன்மை கொண்டது. இவை நிலப்பரப்பில் 150 முதல் 180 ஆண்டுகள் வரை வாழும். விலங்குகளில் அதிக ஆண்டுகள் வாழும் வெளிநாட்டு விலங்கினம்.

இந்த பண்ணையில் பாதுகாக்கப்பட்ட ஒரு ஆமை கடந்த நவம்பர் 11ம் தேதி திடீரென மாயமானது. இதனை, அங்குள்ள அலுவலர்கள், ஊழியர்கள் பல இடங்களில் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதனால், மர்மநபர்கள் அதனை திருடி சென்று இருக்கலாம் என தெரிந்து அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து கடந்த 2 நாட்களுக்கு முன், மாமல்லபுரம் போலீசில், பண்ணை நிர்வாகம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து பண்ணையில் வேலை செய்யும் ஊழியர்களால் ஆமை திருடப்பட்டதா, வெளியாட்கள் யாரவது சுவர் ஏரி குதித்து திருடி சென்றனரா என சிசிடிவி கேமராவி பதிவான காட்சிகளை வைத்து தீவிரமாக விசாரிக்கின்றனர். திருடு போன அமையின் மதிப்பு ரூ.15 லட்சம் என கூறப்படுகிறது.

Tags : crocodile farm ,
× RELATED புலிகள் காப்பகம், அமராவதி முதலை...