×

வேலாயுதம்பாளையம் அருகே கூடுதல் விலைக்கு மது விற்றவர் கைது

வேலாயுதம்பாளையம், அக். 3: கரூர் மாவட்டம் புன்னம் சத்திரம் காகித ஆலை செல்லும் சாலையில் உள்ள புது குறுக்கு பாளையத்திலிருந்து நல்லி கோவில் செல்லும் சாலையில் உள்ள ஒரு முள் காட்டில் அரசு அனுமதி இன்றி ஒருவர் மதுப்பாட்டில்களை மறைத்து வைத்துக்கொண்டு அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வேலாயுதம்பாளையம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மனோகரன் தலைமையிலான போலீசார் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்ற மதுவிற்றவரை சுற்றிவளைத்தனர். விசாரணையில் புது குறுக்கு பாளையம் நடுத்தெருவை சேர்ந்த அன்பழகன் (45) என்பது தெரியவந்தது. அவரிடமிருந்து விற்பனைக்கு 16 மதுப்பாட்டில்கள், 5 பறிமுதல் செய்தனர்.  அன்பழகன் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை கரூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில் சிறையில் அடைத்தனர்.

 

Tags : Velayudhampalayam ,Pudu Kussapalayam ,Nalli Kovil ,Punnam Chatram Paper Mill ,Karur ,
× RELATED கோரிக்கையை வலியுறுத்தி ஊராட்சித்துறை ஓய்வூதிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்