மனநலம் பாதித்த குழந்தையை அடித்து கொன்ற தாய் கைது

தண்டையார்பேட்டை: கொருக்குப்பேட்டை அருகே மனநலம் பாதித்த குழந்தையை அடித்து கொன்ற தாயை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டை இளைய முதலி தெருவை சேர்ந்தவர் சக்திவேல் (38), கூலி தொழிலாளி. இவருக்கும், நதியா (33) என்பவருக்கும் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. தம்பதிக்கு 3 வயதில் ஆண் குழந்தை உள்ளது. பிறந்தது முதல் இந்த குழந்தை மனவளர்ச்சி குன்றி காணப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில், கடந்த ஜனவரி மாதம் இந்த குழந்தை உடல் நலம் பாதிக்கப்பட்டு அடிக்கடி மயங்கி விழுவதாக கூறி, தாய் நதியா ஸ்டான்லி அரசு மருத்துவயில் குழந்தையை சேர்த்துள்ளார்.

இதையடுத்து, உள் நோயாளியாக அனுமதித்து தொடர் சிகிச்சை அளித்தனர். சமீபத்தில் குழந்தை சிகிச்சை பலனின்றி இறந்தது. தகவலறிந்து வந்த கொருக்குப்பேட்டை போலீசார், சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். இந்த அறிக்கையில், குழந்தை தலையில் பலத்த அடி விழுந்ததே உயிரிழப்புக்கு காரணம், என தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய் நதியாவிடம் கொருக்குப்பேட்டை போலீசார் விசாரித்தபோது, முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தீவிர விசாரணையில், நதியா தனது குழந்தையை தலையில் பலமாக தாக்கியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, கொலை வழக்காக மாற்றி நதியாவை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related Stories:

>