இன்று சொர்க்கவாசல் திறப்பையொட்டி ரங்கம் கோயிலில் சிறப்பு டிஜிபி ஆய்வு

திருச்சி, டிச.25:தமிழக காவல்துறையில் டிஜிபியாக திரிபாதி உள்ளார். இதில் சிறப்பு டிஜிபியாக இருப்பவர் ராஜேஷ்தாஸ். இவர் நேற்று முன்தினம் நெல்லையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். தொடர்ந்து விழா முடிந்து முதல்வர் சென்னை புறப்பட்டதும் மதுரை வந்த சிறப்பு டிஜிபி அங்கு ஐஜி மற்றும் கமிஷனர் அலுவலகத்தில் ஆய்வு செய்தார். பின்னர் மதுரையில் தங்கிய அவர், நேற்று காலை திருச்சி வந்தார். இங்கு மத்திய மண்டல ஐஜி அலுவலகம், கமிஷனர் அலுவலகங்களில் ஆய்வு செய்தார். அப்போது ரவுடிகள் விவரம், வழக்குகள் பதிவேடு, சட்டமன்ற தேர்தல் வர இருப்பதையொட்டி மத்திய மண்டலம் மற்றும் மாநகரில் அதிகாரிகள் இடமாற்றம் குறித்து ஆய்வு மேற்கொண்டார். இதில் மத்திய மண்டல ஐஜி., ஜெயராம், மாநகர கமிஷனர் லோகநாதன் உடனிருந்தனர். பின்னர் மாலை ரங்கம் சென்ற சிறப்பு டிஜிபி ராஜேஷ்தாஸ், அங்கு சொர்க்கவாசல் திறப்பையொட்டி செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தார். இதை தொடர்ந்து அவர் சென்னை புறப்பட்டு சென்றார்.

10 பேர் கைது

தமிழ்புலிகள் கட்சி மாவட்ட தலைவர் ரமணா தலைமையில் அக்கட்சியினர் பெரியாருக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் பெரியார் சிலை முன் நின்று மத்திய அரசை கண்டித்தும், வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி கோஷமிட்டு ஜியோ சிம்கார்டு மற்றும் அட்டைகளை திடீரென எரித்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட ரமணா உள்பட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

>