×

நிவர் புயல், மழையால் சேதமடைந்த தொகுப்பு வீடுகளை அகற்றி புதிதாக கட்டித்தர வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மன்னார்குடி, டிச. 25: நிவர் புயல், மழையால் சேதமடைந்த அனைத்து தொகுப்பு வீடுகளையும் ரூ.5 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டித்தர வேண்டும், நூறு நாள் வேலை திட்டத்தை 200 நாட்களாக உயர்த்தி நாளொன்றுக்கு ரூ.500 ஊதியம் வழங்க வேண்டும், நிலுவையில் உள்ள சம்பள பாக்கி தொகையை உடனே வழங்க வேண்டும். கொரோனா மற்றும் தொடர் மழை காரணமாக வேலை இழந்துள்ள அனைவர்க்கும் ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கோட்டூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்எல்ஏவும், சிபிஐ மாவட்ட செயலாளருமான வை.சிவபுண்ணியம் தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி முன்னாள் எம்எல்ஏ உலகநாதன், ஒன்றிய செயலாளர் மாரிமுத்து, ஒன்றியக்குழு தலைவர் மணிமேகலை முருகேசன், விவசாய சங்க ஒன்றிய செயலாளர் பரந்தாமன் உள்ளிட்ட பலர் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.

Tags : Demonstration ,removal ,block houses ,ones ,
× RELATED தெற்காசியாவில் முதல்முறையாக ரோபோ...