×

பொதுமக்கள் கோரிக்கை பரமநாதன் சேவையில் பெருமாள் காளான் மதிப்புக்கூட்டுதல் பயிற்சி

நீடாமங்கலம், டிச.25: நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் உணவியல்துறை பேராசிரியர் கமலசுந்தரி தலைமையில் காளான் பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டுதலுக்கான பயிற்தி நடந்தது. பயிற்சியில் பேராசிரியர் கமலசுந்தரி பேசுகையில், காளானை எவ்வாறு பதப்படுத்தி சந்தை விற்பனைக்கு தகுந்தவாறு விற்பனை செய்யலாம் என்பதை செயல்முறை விளக்கமளித்தார். மேலும் காளான் அறுவடை செய்யும் பருவம் முதல் அதை பதப்படுத்தும் முறையான குறுகியகால இருப்பு வைக்கும் முறை மற்றும் நீண்ட கால சேமிப்பு முறைகளை கற்றுத்தந்தார். உலர் காளான் பொடி, காளான் பொடியை கொண்டு தயாரிக்கும் பொருட்களான காளான் சூப் மிக்ஸ், காளான் பஜ்ஜி போன்டா மிக்ஸ், காளான் சப்பாத்தி மிக்ஸ், காளான் வடகம், மேலும் இந்த மிக்ஸ்யை பயன்படுத்தி சப்பாத்தி, சூப், காளான் ஊறுகாய் செய்யும் முறைகளை விளக்கினார். முனைவர்கள் தோட்டக்கலை ஜெகதீசன், ராதாகிருஷ்ணன், செல்வமுருகன் மற்றும் திட்ட உதவியாளர் ரேகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மாநகர பேருந்துகளில் மின்னணு...