×

திவாகரன் பேட்டி திமுக வெற்றிக்கு அயராது பாடுபடுவோம்

மன்னார்குடி, டிச. 25: அதிமுகவை நிராகரிப்போம் என்ற தலைப்பில் திமுக சார்பில் மன்னார்குடி கிழக்கு, மேற்கு ஒன்றியங்களில் 4 இடங்களில் கிராம சபை கூட்டங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. மணக்கரை, புள்ளமங்கலம், சித்திரையூர் ஆகிய ஊராட்சிகளில் ஒன்றிய செயலாளர் குமரேசன் முன்னிலையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட செயலாளரும், திருவாரூர் எம்எல்ஏவுமான பூண்டி கலைவாணன் தலைமை வகித்து பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் அதிமுகவின் அவலங்களை மக்களிடம் எடுத்துக்கூறி திமுக வெற்றிக்கு அயராது பாடுபட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல கண்டிதம்பேட்டை ஊராட்சியில் ஒன்றிய செயலாளர் மேலவாசல் தன்ராஜ் முன்னிலையில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் எம்எல்ஏ டிஆர்பி ராஜா தலைமையேற்று பொதுமக்களிடம் கோரிக்கைகளை கேட்டறிந்தார். அப்போது ஏராளமான பொதுமக்கள் தங்களது குறைகளை மனுவாக எழுதி கொடுத்தனர்.

Tags : interview ,Divakaran ,DMK ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 1 பதவிக்கு 2ம் கட்ட நேர்முக தேர்வு