ஒரத்தூரில் திமுக கிராமசபை கூட்டம் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்பி பங்கேற்பு

திருக்காட்டுப்பள்ளி, டிச. 25: திருக்காட்டுப்பள்ளி அருகே ஒரத்தூரில்திமுக கிராமசபை கூட்டம் நேற்று நடந்தது. பூதலூர் வடக்கு ஒன்றியம் ஒரத்தூரில் “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற தலைப்பில் தஞ்சை எம்பி எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் தலைமையில் கிராமசபை கூட்டம் நடந்தது. ஊராட்சி செயலாளர் பன்னீர்செல்வம் வரவேற்றார். பூதலூர் வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் கல்லணை செல்லக்கண்ணு முன்னிலை வகித்தார். மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பரிமளம்ஜெயராமன், பூதலூர் ஒன்றிய கவுன்சிலர் அருமைச்செல்விரமேஷ், ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் மனோகரன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பாபநாசம்:  பாபநாசம் அடுத்த கபிஸ்தலம் அருகே உமையாள்புரத்தில் திமுக சார்பில் கிராமசபை கூட்டம் நடந்தது. பாபநாசம் ஒன்றிய செயலாளர் தாமரைச்செல்வன் தலைமை வகித்தார். பாபநாசம் ஒன்றியக்குழு தலைவர் சுமதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சாலை வசதி, பஸ்ஸ்டாண்ட், தொகுப்பு வீடு தொடர்பான கோரிக்கைகளை மக்கள் எழுப்பினர். அய்யம்பேட்டையில் நடந்த கிராமசபை கூட்டத்துக்கு மாநிலங்களவை உறுப்பினர் சண்முகம் தலைமை வகித்தார். மாவட்ட துணை செயலாளர் அய்யாராசு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதேபோல் மெலட்டூர் அடுத்த இரும்புத்தலை, கோவத்தக்குடியில் நடந்த கிராமசபை கூட்டத்தில் அம்மாப்பேட்டை ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் கலைச்செல்வன், ஒன்றிய செயலாளர் சுரேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

கும்பகோணம்:  கும்பகோணம் அடுத்த மருதாநல்லூர், பாபுராஜபுரம், அம்மாசத்திரம் ஆகிய ஊராட்சிகளில் ”அதிமுகவை நிராகரிக்கிறோம்” என்ற கிராமசபை கூட்டம் எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தலைமையில் நடந்தது. இதில் அனைவரும் ஒன்றிணைந்து “அதிமுகவை நிராகரிக்கிறோம்” என கையெழுத்திட்டு தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. கிழக்கு ஒன்றிய திமுக பொறுப்பாளர் கணேசன், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் அசோக்குமார், வடக்கு ஒன்றிய பொறுப்பாளர் பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: