×

புன்னைநல்லூர் மாரியம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கை வசூல் ரூ.13 லட்சம்

தஞ்சை, டிச. 25: தஞ்சை அடுத்த புன்னைநல்லூரில் மாரியம்மன் கோயில் உள்ளது. இந்நிலையில் புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் உண்டியல்களில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணும் பணி நேற்று நடந்தது.  உதவி ஆணையர் (நகை சரிபார்ப்பு) வில்வமூர்த்தி, அரண்மனை தேவஸ்தான உதவி ஆணையர் கிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையில் இந்து சமய அறநிலையத்துறை ஆய்வாளர் கவியரசு, பரம்பரை அறங்காவலர் பிரதிநிதி கோபாலகிருஷ்ணன், செயல் அலுவலர் மாதவன் மற்றும் கோயில் பணியாளர்கள் முன்னிலையில் வங்கி அதிகாரிகள், மகளிர் சுய உதவி குழுவினர், பொதுமக்கள் ஆகியோர் உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.13,15,745 ரொக்கமாகவும், 363 கிராம் தங்கம், 435 கிராம் வெள்ளி இருந்தன. சுவாமிமலை முருகன் கோயிலில் ரூ.19 லட்சம் உண்டியல் வசூல்: கும்பகோணம் அடுத்த சுவாமிமலை சுவாமிநாத சுவாமி கோயில் அறுபடை வீடுகளில் நான்காம் படை வீடாகும். இந்த கோயிலில் 48 நாட்களுக்கு பிறகு உண்டியல் எண்ணும் பணி நடந்தது. கோயில் துணை ஆணையர் ஜீவானந்தம், இணை ஆணையர் செல்வராஜ் ஆகியோர் மேற்பார்வையில் கோயில் பணியாளர்கள் பக்தர்களின் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் ரூ.19,04,704 பக்தர்கள் காணிக்கையாக இருந்தது.

Tags :
× RELATED நீர் நிலைகளில் வண்டல் மண் எடுக்க...