பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தஞ்சை, டிச. 25: தஞ்சை மாவட்டத்தில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான துரைசந்திரசேகரன், தஞ்சை நகர செயலாளரும், எம்எல்ஏவுமான நீலமேகம், முன்னாள் மாவட்ட பொறுப்பாளர் செல்வம், ஒன்றிய செயலாளர் முரசொலி மற்றும் ஏராளமானோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் திக மாவட்ட தலைவர் அமர்சிங், திக மாநில பொது செயலாளர் ஜெயக்குமார், மதிமுக மாவட்ட செயலாளர் உதயகுமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் ராஜேந்திரன், விசி மாவட்ட செயலாளர் சொக்காரவி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் விவசாயிகள் போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் வீரமோகன், ஏஐடியூசி மாநில செயலாளர் சந்திரகுமார் மற்றும் ஏராளமானோர் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தஞ்சை தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட துணைத்தலைவர் அன்பரசன் தலைமை வகித்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தஞ்சை வட்டார தலைவா் ரவிச்சந்திரன், மாநகர மாவட்ட துணைத்தலைவா் செந்தில் பழனிவேல் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஒரத்தநாடு அடுத்த வடசேரியில் உள்ள பெரியார் சிலைக்கு ஒரத்தநாடு எம்எல்ஏ ராமச்சந்திரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். ஒரத்தநாட்டில் உள்ள பெரியார் சிலைக்கு திமுக ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், திக மாவட்ட செயலாளர் அருணகிரி, திக ஒன்றிய செயலாளர் லெட்சுமணன், மதிமுக ஒன்றிய செயலாளர் மணிவண்ணன், சிபிஐ ஒன்றிய செயலாளர் முருகையன், சிபிஎம் ஒன்றிய செயலாளர் சுரேஷ், விசி கட்சி விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிர்வாகி ஜெயசங்கர் மற்றும் பலர் பங்கேற்று மாலை அணிவித்தனர்.

பாபநாசம் திருப்பாலைத்துறையில் உள்ள பெரியார் சிலைக்கு திராவிடர் கழகம் சார்பில் மாவட்ட செயலாளர் துரைராஜ் மற்றும் பலர் மாலை அணிவித்தனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட பொருளாளர் உறவழகன், சட்டமன்ற தொகுதி செயலாளர் தமிழன் மற்றும் பலர் மாலை அணிவித்தனர். பட்டுக்கோட்டை: பட்டுக்கோட்டை பேருந்து நிலையம் அருகில் உள்ள பெரியார் சிலைக்கு தஞ்சை தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஏனாதி பாலசுப்பிரமணியன் தலைமையில் திக, திமுக, காங்கிரஸ், இந்திய மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசி, மதிமுக உள்ளிட்ட கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அதேபோல் தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழகம் சார்பில் சுக்கிரன்பட்டியில் உள்ள பெரியார் சிலைக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ஜெயஇந்திரஜித் தலைமையில், நிறுவனர் தலைவர் சதாசிவக்குமார் மாலை அணிவித்தனர். மதுக்கூர் முக்கூட்டு சாலையில் உள்ள பெரியார் சிலைக்கு தமிழ்நாடு ஆதிதிராவிடர் முன்னேற்ற கழக மாவட்ட இளைஞரணி செயலாளர்  கொடி தமிழ்சேகுவரா உள்ளி–்ட்ட பலர் அஞ்சலி செலுத்தினர்.

Related Stories:

>