×

சிலைக்கு கட்சியினர் மாலை அணிவிப்பு விராலிமலையில் ஜனவரி 17ல் ஜல்லிக்கட்டு அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

விராலிமலை, டிச.25: விராலிமலையில் வருகிற ஜனவரி 17ம் தேதி ஜல்லிக்கட்டு நடைபெறும் என்றும், ஜல்லிக்கட்டில் கொரோனா பரிசோதனை செய்து கொண்ட வீரர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று மக்கள் நல்வாழ்வுதுறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார். விராலிமலையில் முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு நாளையொட்டி எம்ஜிஆர் சிலைக்கு மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் விஜயபாஸ்கர் மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பின்னர் முதல்வரால் திறந்து வைக்கப்பட்ட ஜல்லிகட்டு காளை சிலைக்கு மாலை அணிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் கூறியதாவது:

தமிழக அரசு 2021ம் ஆண்டு ஜல்லிகட்டு நடத்த ஜல்லிகட்டு வழிகாட்டு முறைகளை பின்பற்றி நடத்த அனுமதித்துள்ளது. அதன்படி வரும் ஜனவரி 17ம் தேதி எம்ஜிஆர் பிறந்தநாள் விழாவையொட்டி அதிமுக சார்பில் விராலிமலையில் ஜல்லிகட்டு நடத்தப்படும் எனவும், ஜல்லிட்டில் பங்கேற்கும் வீரர்கள் கொரோனா பரிசோதனை செய்து கொண்டவர்கள் மட்டும்தான் அனுமதிக்கப்படுவார்கள். தமிழக அரசு அதற்கான அரசாணை விரைவில் வெளியிடும் என்றும், லண்டனில் இருந்து தமிழகம் வந்தவர்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப் பட்டுள்ள நிலையில் அதன் பரிசோதனை முடிவுகள் விரைவில் தெரிவிக்கப்படும். தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனை முடிவுகள் 12 மணி நேரத்தில் தெரிவிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார்.

Tags : Vijayabaskar ,party ,Viralimalai ,
× RELATED முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நிபந்தனை ஜாமீன்