×

அன்னவாசல் ஒன்றிய பகுதியில் புதிய பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா

இலுப்பூர், டிச. 25 : அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள புதிய பள்ளிக் கட்டடங்களுக்கு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அடிக்கல் நாட்டினார். அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் புதிதாக கட்டப்பட உள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவிற்கு மாவட்ட கலெக்டர் உமாமகேஸ்வரி தலைமை வகித்தார். மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அன்னவாசல் ஊராட்சி ஒன்றியம், எண்ணை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் திட்டத்தின் கீழ் ரூ.13.77 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள கூடுதல் வகுப்பறை கட்டடம், முக்கணாமலைப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் ரூ.178.05 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் பள்ளிக் கட்டடப் பணிகள் என ரூ.1.92 கோடி மதிப்பில் கட்டப்பட உள்ள பள்ளி கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் விஜயலெட்சுமி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சரவணன், உதவிப் பொறியாளர் பாஸ்கர், அன்னவாசல் ஒன்றியக்குழுத் தலைவர் ராமசாமி உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,school buildings ,Annavasal Union Territory ,
× RELATED பெருமாள் கோயில் கும்பாபிஷேக விழா