அடைக்கம்பட்டி ஊராட்சியில் திமுக கிராமசபை கூட்டம்

பாடாலூர், டிச.25: ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அடைக்கம்பட்டி ஊராட்சியில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது. தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆணைக்கிணைங்க, பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் மேற்கு ஒன்றிய தி.மு.க சார்பில் அடைக்கம்பட்டி ஊராட்சியில் அ.தி.மு.க.வை நிராகரிக்கிறோம் என்ற கிராம சபைக் கூட்டம், ஒன்றிய பொறுப்பாளர் சோமு. மதியழகன் தலைமையில் நடைபெற்றது. பெரம்பலூர் தி.மு.க மாவட்ட செயலாளர் குன்னம் ராஜேந்திரன் அ.தி.மு.க அரசின் ஊழல் குறித்தும், வேளாண் சட்டங்களின் பாதிப்புகள் குறித்தும் பொதுமக்களிடம் எடுத்துக் கூறினார் . இந்த நிகழ்ச்சியில், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணை செயலாளர் துரைசாமி, மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் வேணுகோபால், இலக்கிய அணி துணை அமைப்பாளர் ரமேஷ் , உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>