ஆம்லெட் கேட்டா தரமாட்டியா: ஓட்டல் ஊழியர்களை தாக்கிய கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது

கோவை, டிச.25: கோவை ஆலாந்துறை அருகேயுள்ள நரசீபுரம் பகுதியில் கல்லூரி மாணவர்கள் 3 பேர் ஓட்டல் ஒன்றில் சாப்பிட சென்றனர். இவர்கள் மது போதையில் இருந்துள்ளனர். அங்ேக சென்ற இவர்கள் கடையில் இருந்த ஊழியர்களிடம் ஆம்லெட் கேட்டனர். அப்போது இவர்கள் ஒரு ஆம்லெட்டிற்கு இரண்டு இலை கேட்டதாக தெரிகிறது. கடை ஊழியர்கள், வாங்கறது ஒரு ஆம்லெட், அதுக்கு ரெண்டு இலையா, தரமுடியாது போ எனக்கூறியுள்ளனர். இதில் கோபமடைந்த அவர்கள் கடை ஊழியர்களை தகாத வார்த்தையில் திட்டி சரமாறியாக தாக்கினர்.

‘‘ எங்கடா உங்க கடை ஓனரு. நாங்க இந்த காலேஜூல படிச்சோம், எவ்வளவு தடவ இந்த கடைக்கு வந்திருக்கோம், எங்கள தெரியலயா, ’’ என கேட்டனர். இந்த தாக்குதல் காட்சியை மாணவர்களில் ஒருவர் வீடியோ எடுத்துள்ளனர். அடி உதை வாங்கிய ஊழியர்கள், இதை பற்றி யாரிடமும் சொல்லவில்லை. இந்நிலையில் மாணவர்கள் இந்த தாக்குதல் வீடியோவிற்கு பாட்டு போட்டு ‘மீம்ஸ்’ செய்து அதை யூடியூப்பில் வெளியிட்டனர். வாட்ஸ் அப், பேஸ்புக்கில் இந்த தாக்குதல் வைரலானது. ஓட்டல் ெபயருடன் வீடியோ வந்ததை பார்த்து பதறி போன கடை உரிமையாளர், ஊழியர்களை அழைத்து விவரம் கேட்டார்.

அப்போது அவர்கள் ஆமாம், வந்தாங்க, தூக்கி போட்டு அடிச்சாங்க, அப்புறம் போயிட்டாங்க எனக்கூறியுள்ளனர். அடி உதை வாங்கி விட்டு ஏன் சும்மா இருந்தீர்கள் என அவர் கேட்டு விட்டு ஆலாந்துறை போலீசில் புகார் அளித்தார்.  போலீசார், வீடியோ பதிவுகளை பார்த்து விட்டு தாக்குதல் நடத்திய மாணவர்கள் பிரவீன் (19), விக்னேஷ் (20), ரமேஷ் (20) ஆகியோரை கைது செய்தனர்.

Related Stories:

>