×

ரகுராம் ராஜன் தந்தை மறைவு : முதல்வர் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி: இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் – நமது பொருளாதார ஆலோசனை குழு உறுப்பினர் ரகுராம் ராஜன் தந்தையும், இந்திய உளவுத்துறையில் சிறப்பாக பணி ஆற்றிய அதிகாரியுமான ராகவாச்சாரி கோவிந்தராஜன் மறைந்த செய்தியறிந்து வருத்தமடைந்தேன். தந்தையை இழந்து தவிக்கும் ரகுராம் ராஜனை தொடர்புகொண்டு அவருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தேன். நம் நாட்டின் பாதுகாப்புக்காக, குறிப்பாக ‘ரா’ அமைப்பு தோற்றுவிக்கப்பட்ட காலத்தில் இருந்து அதில் பணியாற்றிய சிறப்புக்குரிய ராகவாச்சாரி கோவிந்தராஜன் பணி நன்றியுடன் நினைவுகூரப்படும்.

Tags : Raghuram Rajan ,Chennai ,Chief Minister ,M.K. Stalin ,Raghavachari Govindarajan ,Governor ,Reserve Bank of India ,Economic Advisory Council ,Indian Intelligence Service ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து