×

18 இடங்களில் நடந்தது வேளாண் சட்டத்தை திரும்ப பெற கோரி ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

நாகை,டிச.25: வேளாண் சட்டத்தை திரும்ப பெறக்கோரி ஏர் கலப்பையுடன் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வலியுறுத்தி காங்கிரஸ் கட்சி சார்பில் நாகை அபிராமி அம்மன் சன்னதி திடலில் கலப்பையுடன், மாட்டு வண்டியில் ஏறி நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் எம்பி ராஜேந்திரன் தலைமை வகித்தார். மத்திய அரசின் வேளாண் சட்ட திருத்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும். டெல்லியில் போராடும் விவசாயிகள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் ஆகிய கோஷங்களை எழுப்பி ஏர் கலப்பையுடன் மாட்டு வண்டியில் ஏறி ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின்னர் மாட்டு வண்டியில் அனுமதியின்றி ஊர்வலமாக செல்ல முயன்றனர். ஆனால் ஊர்வலமாக செல்ல போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால் ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அங்கிருந்து கலைந்து சென்றனர். திமுக மாவட்ட பொறுப்பாளர் கவுதமன், திருச்சி வேலுசாமி, காங்கிரஸ் கட்சி மாவட்ட தலைவர் கனகராஜ், பொதுக்குழு உறுப்பினர்கள் ராமலிங்கம், நவ்ஷாத், நகர தலைவர் ரவிச்சந்திரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Demonstrations ,Congressmen ,places ,
× RELATED ராமேஸ்வரத்தில் 25 இடங்களில் குடிநீர் தொட்டி: பொதுமக்கள் மகிழ்ச்சி