×

கீழ்வேளூர் அருகே திமுக ஒன்றிய கவுன்சிலர் கார் கொட்டகைக்கு தீ வைப்பு


கீழ்வேளூர், டிச.25: நாகை மாவட்டம் கீழ்வேளூரை அடுத்த வண்டலூர் ரோடு தெருவை சேர்ந்தவர் ரெங்கா (39). இவர் கீழ்வேளூர் திமுக ஒன்றிய கவுன்சிலராக உள்ளார். இவர் வீட்டின் அருகே உள்ள இடத்தில் தனது காரை நிறுத்த கூரை கொட்டகை அமைத்து காரை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் ரெங்கா வீட்டில் இல்லாத நேரத்தில் நேற்று முன்தினம் இரவு ரெங்காவின் கார் கொட்டகையின் மேற்கூரை பின்பக்கம் எரிந்துள்ளது. இதை பார்த்த அருகில் இருந்தவர்கள் தண்ணீரை ஊற்றி தீயை அணைத்துள்ளனர். இதில் கூரை கொட்டகையின் பின் பகுதி எரிந்து சேதம் அடைந்தது. மேலும் காரின் பின்பகுதியும் தீயில் சேதம் அடைந்தது. இது குறித்து ரெங்கா வேளாங்கண்ணி காவல் நிலையத்தில் கொடுத்த புகார் கொடுத்துள்ளார். அதன்பேரில் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Tags : DMK Union Councilor ,Kizhvelur ,
× RELATED நாகை உழவர்சந்தை கீழ்வேளூரில் 100 நாள்...