×

கரூரில் இருந்து செல்லும் கோவை-ஈரோடு சாலை பிரிவில் அடிக்கடி விபத்து

கரூர், டிச.25: கரூரில் இருந்து கோவை மற்றும் ஈரோடு சாலைகள் பிரியும் இடத்தில் ஏற்படும் போக்குவரத்து பிரச்னையை சீரமைக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. கரூர்-கோவை சாலை திருக்காம்புலியூர் ரவுண்டானா வரை செல்கிறது. ரவுண்டானா பகுதியை தாண்டியதும் முனியப்பன் கோயில் அருகே கோவை மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளுக்கான சாலை பிரிகிறது.  கோவை மற்றும் ஈரோடு போன்ற பகுதிகளில் இருந்து கரூர் வரும் அனைத்து வாகனங்களும் இந்த சாலையில் இணைந்து கரூர் நோக்கிச் செல்கிறது.

இந்நிலையில், வாகனங்கள் ஒன்று சேர்ந்து கரூர் நோக்கி செல்லும் இடத்தில் வாகன குறுக்கீடு காரணமாக அவ்வப்போது வாகன விபத்துக்கள் நடைபெறுகிறது. கடந்த சில மாதங்கள் வரை இந்த பகுதியில் சிக்னல் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதுவும் இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, காலை மற்றும் மாலை நேரங்களில்தான் இந்த சந்திப்பு பகுதியில் கடும் நெரிசல் ஏற்படுகிறது. எனவே, இதுபோன்ற பிரச்னைகளை நிரந்தரமான தீர்வுக்கு கொண்டு வர தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும் என அனைத்து தரப்பினர்களும் கோரிக்கை வைத்துள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பார்வையிட்டு இந்த பிரச்னைக்கு முடிவுகாண ஏற்பாடுகள் செய்திட வேண்டும் என மக்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags : accidents ,Coimbatore-Erodu ,Karur ,
× RELATED 2000 ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்ட கரும்பு அறுவடை பணிகள் தீவிரம்