பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

கரூர், டிச.25: தந்தை பெரியாரின் நினைவுதினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதனை முன்னிட்டு கரூர் மாவட்ட திமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. கரூர் திருமாநிலையூர் பகுதியில் உள்ள பெரியாரின் திருவுருவ சிலைக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில், மாநில விவசாய அணி செயலாளர் சின்னசாமி, குளித்தலை எம்எல்ஏ ராமர், கொள்கை பரப்பு துணைச் செயலாளர் கரூர் முரளி, சிறுபான்மை பிரிவு துணைச் செயலாளர் ஜான் உள்பட அனைத்து ஒன்றிய, நகர, பேரூர் கழக நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர். இதேபோல், திராவிடர் கழகம் உள்பட பல்வேறு அமைப்புகள் சார்பிலும், லைட்ஹவுஸ் கார்னர், திருமா நிலையூர் பகுதியில் உள்ள திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

Related Stories:

>