பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

தர்மபுரி, டிச.25: தர்மபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில், பெரியாரின் 47வது நினைவு நாளைமுன்னிட்டு, அவரது சிலைக்கு கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் தடங்கம் சுப்ரமணி எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. நகர பொறுப்பாளர் மே.அன்பழகன், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் நாட்டான் மாது, சந்திரமோகன், தங்கமணி, நகர பொறுப்புக்குழு உறுப்பினர்கள் முல்லைவேந்தன், சுருளிராஜன், அணிகளின் அமைப்பாளர்கள் ரஹீம், தொண்டரணி ராஜா, பொன்.மகேஷ்வரன், வெல்டிங் ராஜா, விவசாய அணி ரவி, கோமலவள்ளி ரவி மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.தர்மபுரி நகர அதிமுக சார்பில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. எம்எல்ஏ கோவிந்தசாமி, அதிமுக நகர செயலாளர் பூக்கடை ரவி, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் வெற்றிவேல், பால்வளத்தலைவர் டி.ஆர்.அன்பழகன், நீலாபுரம் செல்வம், பழனிசாமி மற்றும் அதிமுகவினர் கலந்து கொண்டனர். தர்மபுரி மாவட்ட அமமுக சார்பில், மாவட்ட செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாவட்ட திக சார்பில் தலைவர் காமராஜ் தலைமையில் மாநில செயலாளர் ஜெயராமன், சிவாஜி மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்தனர். மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் ஜெயந்தி தலைமையில், பெரியார் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

பென்னாகரம்: தர்மபுரி மேற்கு மாவட்ட திமுக சார்பில், பென்னாகரம் சந்தை தோப்பில் உள்ள பெரியார் சிலைக்கு, மேற்கு மாவட்ட பொறுப்பாளர் இன்பசேகரன் எம்எல்ஏ தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் பொறுப்பு குழு உறுப்பினர் மாதையன், காளியப்பன், மணி, மாதேசன், மாவட்ட கவுன்சிலர், ஏரியூர் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், பென்னாகரம் ஒன்றிய செயலாளர் செல்வராஜ், நகர செயலாளர் வீரமணி, பொருளாளர் மடம் முருகேசன், கவுன்சிலர் சென்னையன், வானவில் சண்முகம், கமலேசன், அன்பு, பூவண்ணன், வினு அன்பழகன், ஏரியூர் ஒன்றிய துணை செயலாளர் சம்பத்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.அரூர்: அரூர் அக்ரஹாரத்தில் பெரியார் சமத்துவபுரத்தில் திமுக சார்பில், பெரியார் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் ஒன்றிய செயலாளர்கள் சந்திரமோகன், சௌந்தராஜ், மேற்கு ஒன்றிய பொறுப்பாளர் கிருஷ்ணகுமார், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>