×

காலிபணியிடத்திற்கு விண்ணப்பம் வரவேற்பு

தர்மபுரி, டிச.25:தர்மபுரி மாவட்ட கலெக்டர் மலர்விழி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:தர்மபுரி மாவட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளுக்கு, 32 சமையலர் பணியிடங்கள், 14 துப்புரவாளர்(தொகுப்பூதியம்) மற்றும் 1 துப்புரவாளர்(காலமுறை) காலிப்பணியிடங்களை நிரப்பிட, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர் தமிழில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். சமையலர் பணியிடத்திற்கு அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமைத் தரப்படும். 18 முதல் 35வயது வரை உள்ளவர்களாக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தில் குடியிருப்பவராக இருக்க வேண்டும். தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த தகுதியுடைய நபர்கள், தர்மபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று நேரடியாகவோ, பதிவஞ்சல் மூலமாகவோ மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகத்திற்கு வரும் 29.12.2020 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags :
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா