போலீஸ் நிலையங்களில் மக்கள் குறைதீர் முகாம்

கிருஷ்ணகிரி, டிச.25:  கோவை மேற்கு மண்டல போலீஸ் ஐஜி பெரியய்யா, சேலம் சரக டிஐஜி பிரதீப் குமார், எஸ்.பி பண்டிகங்காதர் ஆகியோர் உத்தரவின்பேரில், மாவட்டத்தில் போலீஸ் நிலையங்களில் மக்கள் குறை தீர்க்கும் முகாம்கள் நடந்து வருகின்றன. அதன்படி, கிருஷ்ணகிரி நகர போலீஸ் நிலையத்திற்குட்பட்ட புகார் மனுக்கள் தொடர்பாக மக்கள் குறைதீர்க்கும் முகாம் கிருஷ்ணகிரி டவுன் போலீஸ் நிலையத்தில் நேற்று நடந்தது. முகாமிற்கு கிருஷ்ணகிரி டிஎஸ்பி சரவணன் தலைமை வகித்தார். டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர், எஸ்.ஐ. சிவசந்தர் முன்னிலை வகித்தனர். இதில் பொதுமக்கள் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக 25 மனுக்களை டிஎஸ்பியிடம் வழங்கினர். இதில் உடனடியாக 15 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது.

Related Stories:

>