×

பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

நாமக்கல், டிச.25: நாமக்கல்  கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், நேற்று பெரியார் நினைவு தினம்  அனுசரிக்கப்பட்டது. மாவட்ட பொறுப்பாளர் ராஜேஸ்குமார், பெரியார் உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட  துணை செயலாளர்கள் ராமலிங்கம், பொன்னுசாமி, நகர பொறுப்பாளர்கள் செல்வகுமார்,  பூபதி, ஒன்றிய செயலாளர்கள் அசோக்குமார், பாலசுப்ரமணியம், மாநில இலக்கிய  அணி புரவலர் மணிமாறன், மாநில மகளிர் தொண்டர் அணி இணைச்செயலாளர் ராணி,  பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன், தலைமை செயற்குழு உறுப்பினர்  பவுத்திரம் கண்ணன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கதிர்வேல்,  சிறுபான்மை  அணி அமைப்பாளர் சாம் சம்பத், வழக்கறிஞர் அணி அமைப்பாளர் அறிவழகன், கலை  இலக்கிய பகுத்தறிவு பேரவை ஆனந்தன், இலக்கிய அணி அமைப்பாளர் ரங்கசாமி, தலைமை  கழக பேச்சாளர் ராஜகோபால், தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்  விஸ்வநாத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.அதேபோல் முன்னாள் மத்திய இணை அமைச்சர் காந்திசெல்வன்  பெரியார் உருவப் படத்துக்கு மலர் தூவி  மரியாதை செலுத்தினார். நிகழ்ச்சியில் மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு அணி  அமைப்பாளர் ஆனந்தன், வர்த்தகர் அணி துணை அமைப்பாளர் ரவிச்சந்திரன்,  வழக்கறிஞர் ரமேஷ், ஆதிதிராவிட நலக்குழு துணை அமைப்பாளர் சத்தியபாபு, மாவட்ட  பொறியாளர் அணி துணை அமைப்பாளர்கள் ரமேஷ் அண்ணாதுரை, கௌதம், மாணவர் அணி  பாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

ராசிபுரம்: ராசிபுரம் புதிய பஸ் நிலையம் அருகே திராவிடர் விடுதலை கழகம் சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. நகர செயலாளர் சேகுவேரா தலைமை வகித்தார். நகர தலைவர்  அன்பரசன் முன்னிலை வகித்தார். இதில் முன்னாள் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் பாலு, பெரியார் உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.திருச்செங்கோடு:பெரியார் நினைவு தினத்தையொட்டி, திருச்செங்கோடு புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள அவரது சிலைக்கு, நாமக்கல் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் கே.எஸ். மூர்த்தி எம்எல்ஏ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். நகர செயலாளர் தாண்டவன் கார்த்தி, ஒன்றிய செயலாளர் வட்டூர் தங்கவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மதுரா செந்தில், மாணவரணி அமைப்பாளர் ஜிஜேந்திரன், மகளிர் அணி அமைப்பாளர் பூங்கோதை செல்லதுரை, வர்த்தகர் அணி அமைப்பாளர் வக்கீல் கிரிசங்கர், நெசவாளரணி அமைப்பாளர் சரவண முருகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் முரசொலி முத்து, முன்னாள் மாவட்ட அவைத்தலைவர் தாண்டவன், மொழிப்போர் தியாகி பரமானந்தம், நதர பொறுப்புக்குழு மாதேஸ்வரன், பெருமாள், மைகா ரமேஷ், ஆறுமுகம், மகளிர் அணி மஞ்சுளா, கண்ணாம்பாள், காமராஜ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Periyar Memorial Day ,
× RELATED நிர்மலா சீதாராமன் என்ன பிரதமரா? திருமாவளவன்