வையப்பமலை கவிதாஸ் கல்லூரியில் ராமானுஜர் பிறந்த நாள் விழா

திருச்செங்கோடு,  டிச. 25: திருச்செங்கோடு  அடுத்த வையப்பமலை கவிதாஸ் கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில், கணித மேதை ராமானுஜர் 133வது பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு கல்லூரியின் தாளாளர் செந்தில்குமார் தலைமை  வகித்துப்  பேசுகையில் ‘தொழில் நுட்பத்தின் முன்னேற்றத்திற்கும், நுணுக்கத்திற்கும், கணிதமே முக்கிய  வழிகாட்டுதலாக திகழ்கிறது’ என்றார். கல்லூரி முதல்வர்  விஜயகுமார் வரவேற்றார். கணிதவியல் துறை தலைவர் பாரதி, ராமானுஜர் பெருமைகளை  எடுத்துக்கூறினார். விழா ஏற்பாடுகளை கணிதவியல் பேராசிரியர்  கேசவன்  செய்திருந்தார். விழாவில் அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும்  மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்

Related Stories:

>