சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் நினைவு தினம் அனுசரிப்பு

சேலம், டிச. 25: சேலம் மேற்கு மாவட்ட திமுக சார்பில் பெரியாரின் நினைவு தினம் அனுசரிக்கப் பட்டது. சங்ககிரி- திருச்செங்கோடு பிரிவு ரோட்டில் அவரது படத்திற்கு மாவட்ட பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான செல்வகணபதி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில், அவைத்தலைவர் கோபால், துணை செயலாளர் சம்பத்குமார், தலைமை செயற்குழு உறுப்பினர் முருகேசன், பொதுக்குழு உறுப்பினர்கள் கருணாநிதி, அன்பழகன், நிர்மலா, முன்னாள் எம்எல்ஏ வரதராஜன், ஒன்றிய செயலாளர்கள் ராஜேஷ், பரமசிவம், ரவிச்சந்திரன், நல்லதம்பி, பச்சமுத்து, நகர செயலாளர்கள் காசி விஸ்வநாதன், பாஷா, முன்னாள் ஒன்றிய செயலாளர் தங்கமுத்து, மணிகண்டன், கிறிஸ்டோபர், ராஜவேலு, செல்வம், திருநாவுக்கரசு, கண்ணன், கமலக்கண்ணன், பேரூர் செயலாளர் சுப்பிரமணியம், முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>