டாஸ்மாக் கடையை மூடக்கோரி சாலை மறியல்

திருப்பூர், டிச. 25: திருப்பூர் வஞ்சிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் புதியதாக திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பொதுமக்கள் அப்பகுதியில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருப்பூர், வஞ்சிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஆரம்பசுகாதார நிலையம், பள்ளிகள், வழிபாட்டு தளங்கள் ஆகியவை உள்ளன.

இந்நிலையில் நேற்று வெங்கமேடு பகுதியில் புதியதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதனால் பெண்கள், குழந்தைகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே புதியதாக திறந்துள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி அப்பகுதி பொதுமக்கள் வஞ்சிபாளையம் ரோட்டில் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்த திருமுருகன் பூண்டி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி பொதுமக்களை கலைத்தனர். இதனால் அந்த சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories:

>