தையல் நூல் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் தேர்வு

திருப்பூர், டிச. 25:  தமிழ்நாடு தையல் நூல் வியாபாரிகள் சங்கத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வுக்கான ஆலோசனைக் கூட்டம் திருப்பூர் வாலிபாளையம் சேம்பர் ஹாலில் சங்கத் தலைவர் பரமசிவம் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் ஜெயக்குமார் வரவேற்றார். கூட்டத்தில், சங்கத்தின் புதிய தலைவராக பரமசிவம், ெசயலாளராக ஜெயக்குமார், பொருளாளராக பாலசுப்பிரமணியம், துணைத் தலைவர்களாக சுப்பிரமணியம், ஈஸ்வரமூர்த்தி, துணைச் செயலாளர்களாக சுப்பிரமணியம், மூர்த்தி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 இக்கூட்டத்தில், நூல் வர்த்தகத்தை ஆரோக்கியமான திசையில் கொண்டு செல்வது. விலை ஏற்றம் குறித்து ஆலோசனை செய்வது. அனைத்து நூல் வர்த்தகர்களின் நலனை காக்கும் வகையில் பல்வேறு நலத்திட்டங்களை ஏற்படுத்துவது. கொரோனா கால வர்த்தக முடக்கத்தை சீர் செய்யவும், மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை வைப்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் ஆலோசனை செய்யப்பட்டன. முடிவில், பொருளாளர் பாலசுப்பிரமணியம் நன்றி கூறினார்.

Related Stories:

>