×

அவிநாசி அருகே விளைநிலத்தில் தொழில் பூங்கா அமைக்க எதிர்ப்பு

திருப்பூர்,டிச.25: பாரதிய கிசான் சங்க திருப்பூர் மாவட்ட தலைவர் வேலுசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:
அவிநாசி அடுத்த தத்தனூர், புஞ்சை தாமரைக்குளம், புலிப்பார் ஊராட்சி பகுதிகளில்  சுமார் 890 ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தி, சிப்காட் மூலமாக தொழில் பூங்கா அமைக்க அளவீட்டு பணிகள் நடக்கிறது. இத்திட்டத்திற்கு விளைநிலத்தை கையகப்படுத்த விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அந்த திட்டத்தை அரசு கொண்டுவராது என சபாநாயகர் தனபால் உறுதியளித்தார்.

ஆனால்,தத்தனூர் தொழில் பூங்கா திட்டத்தை ரூ.2,500 கோடியில் செயல்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அரசு மேற்கொண்டு வந்தது அதிர்ச்சி அளிக்கிறது.விவசாயத்துக்கு பயன்படாத நிலங்கள் உள்ள பகுதியில் கொண்டுவர வேண்டிய சிப்காட் தொழிற்பூங்காவை, அத்திக்கடவு - அவிநாசி பாசனப் பகுதியில் கொண்டு வர வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags : park ,Avinashi ,farmland ,
× RELATED தேயிலை பூங்காவை பார்வையிட்டு மகிழும் சுற்றுலா பயணிகள்