பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை துவக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், டிச. 25:  பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை உடனடியாக துவக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை துவக்க வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்கத்தின் சார்பில் தொமுச பனியன் சங்க பொருளாளர் பூபதி தலைமையில் திருப்பூர் மாநகராட்சி அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  

தொமுச பனியன் சங்க செயலாளர் ராமகிருஷ்ணன், ஏஐடியுசி மாவட்ட பொதுச்செயலாளர் சேகர், தலைவர் பழனிசாமி, சிஐடியு பனியன் சங்க செயலாளர் சம்பத், தலைவர் மூர்த்தி, ஐஎன்டியுசி செயலாளர் சிவசாமி, தலைவர் பெருமாள், ஹெச்.எம்.எஸ் பனியன் செயலாளர் முத்துசாமி, துணைத்தலைவர் சண்முகம், எம்.எல்.எப் பனியன் சங்க செயலாளர் மனோகரன், துணை தலைவர் கார்த்தி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள பேச்சுவார்த்தையை உடனே துவக்க வேண்டும், இ.எஸ்.ஐ மருத்துவமனை கட்டிட பணிகளை உடனடியாக துவக்க வேண்டும், பனியன் தொழிற்சாலைகளில் தொழிலாளர்கள் நல சட்டங்களை முழுமையாக அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும், உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளான தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories:

More