பெரியார் படத்துக்கு திமுகவினர் மரியாதை

தென்காசி, டிச. 25: தென்காசி தெற்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், பெரியாரின் 47வது நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.  இதையொட்டி அவரது படத்திற்கு மாவட்ட செயலாளர் வக்கீல் சிவபத்மநாதன் தலைமை வகித்து பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தார். நகர செயலாளர் சாதிர், மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் ஆயான் நடராஜன், கடையம் ஜெயக்குமார்,  ஒன்றிய செயலாளர் அழகுசுந்தரம், திக மாவட்ட தலைவர் வீரன், மாவட்ட அணி அமைப்பாளர்கள் பேச்சிமுத்து, ஆலடி எழில்வாணன், பேரூர் செயலாளர்கள் மேலகரம் சுடலை, மந்திரம், ஜெகதீசன், அணி துணை அமைப்பாளர்கள் சாமித்துரை, வக்கீல் வேலுச்சாமி, வல்லம் செல்வம், நகர நிர்வாகிகள் பால்ராஜ், ஷேக்பரீத், கோபால்ராம், இசக்கித்துரை, ராமராஜா, ஒன்றிய பொறுப்பு குழு உறுப்பினர்கள் குற்றாலம் குட்டி, காசிகிருஷ்ணன், தொண்டரணி பரமசிவன், கண்ணன், காளிதாஸ், முருகேசன், கேசவராம்சிங், மோகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories:

>